காவல்துறையில் பயன்படுத்திய வாகனங்கள் 23ம் தேதி ஏலம்

தர்மபுரி, மார்ச் 14: தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்ட காவல் துறையில், காவல் பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு காலாவதியான அரசு காவல் வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு, அதனை ஏலம் முறையில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 10 ஐஷர், பொலிரோ மற்றும் சுமோ உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களும், 10 இரண்டு சக்கர வாகனங்களும் கழிவு செய்யப்பட்டு ஏலம் விடப்படுகிறது. அந்த ஏலம் வரும் 23ம்தேதி காலை, தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பவம் உள்ளவர்கள், ஏலம் விடப்படும் தேதிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக வாகனத்தை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், ஏலம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆயுதப்படை வாகனப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, முன் பணத் தொகையை வைப்புத் தொகையாக செலுத்தி, ஏலத்தில் பங்கேற்க வேண்டும். ஏலம் முடிந்து 30 நிமிடங்களில் பணம் செலுத்தி, வாகனத்தை பெற்றுச் செல்ல வேண்டும். ஏலம் எடுத்து 30 நிமிடத்தில் பணம் செலுத்தாதவர்களின் ஏலம் ரத்து செய்யப்பட்டு, அந்த வாகனத்தை மறு ஏலம் விடப்படும். மேலும், பணம் கட்டத் தவறியவரின் வைப்பீட்டுத் தொகையை திருப்பி தர இயலாது. ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலம் துவங்கும் முன், வைப்புத் தொகையை செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செலுத்த தவறியவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: