கல்வியறிவு தெருக்கூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி, மார்ச் 5: கொளகத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட கிராமபுற மக்களிடையே, தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ஏழை விவசாயிகள், தொழில்முனைவோர் பள்ளி மாணவ, மாணவிகள், மூத்த குடிமக்கள், சுயஉதவி குழுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு எளிய முறையில் வழங்கப்படும் கடன்கள், டெபாசிட்டுகள் மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகங்கள் (ஏடிஎம், மைக்ரோ ஏடிஎம், பிஓஎஸ், மொபைல் பேங்,) குறித்த விழிப்புணர்வு எளிய மக்கள் புரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் தெருகூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கியின் பல்வேறு கடன் திட்டங்கள் பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடன் வழங்குதல்கள் குறித்தான விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டது. அது சம்பந்தமாக விளம்பர பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும் நடமாடும் ஏடிஎம் வண்டி காட்சிபடுத்தப்பட்டு பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை விருதுநகர் மாவட்ட மகளிர் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஜோதிபாலன் தொகுத்து வழங்கினார்.  

தர்மபுரி மண்டல இணைப்பதிவாளர், ராமதாஸ், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர், சந்தானம், உதவி பொது மேலாளர்கள் ரவி, கோவிந்தராஜன், மாதையன், மேலாளர் பூவராகவன், மேலாளர், சாமிக்கன்னு, கள மேலாளர், சின்னசாமி, சரக மேற்பார்வையாளர்கள் பெரியசாமி, ராமகிருஷ்ணன், உதவியாளர் வெங்கடேசன், ஏஎம் வாகன உதவியாளர்  இளையராஜா, கொளகத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் முருகன், செயலர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: