திமுக செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு

தர்மபுரி, செப்.30: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக 3வது முறையாக தடங்கம் பெ.சுப்ரமணி தேர்வு செய்யப்பட்டு நியமிக்கட்டுள்ளார். இவர் இன்று (30ம்தேதி) சென்னையில் இருந்து தர்மபுரி திரும்புகிறார். இவருக்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், தர்மபுரி நகர செயலாளர் நாட்டான் மாது ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணியை 3வது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வு செய்து நியமித்துள்ளார்.

சென்னையில் இருந்து தர்மபுரி திரும்பு தடங்கம் சுப்ரமணிக்கு இன்று (30ம் தேதி) காலை 10 மணிக்கு பழைய தர்மபுரி தர்மபுரி பச்சமுத்து கல்லூரி அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மாவட்ட செயலாளர் தலைமையில், தர்மபுரி நான்கு ரோடு அண்ணா சிலை மற்றும் பெரியார் சிலை, டாக்டர் அம்பேத்கர் சிலை, காமராஜர் தலைவர்கள் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அதுசமயம் நிர்வாகிகள், வார்டு  செயலாளர்கள், பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கட்சியினர், என அனைவரும் திரளாக கலந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: