கடத்தூரில் திமுவினர் கொண்டாட்டம்

கடத்தூர், செப்.30: தர்மரி மாவட்ட மேற்கு புதிய மாவட்ட செயலாளராக பழனியப்பன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, திமுகவினர் கடத்தூர் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். கடத்தூர் பேரூர் செயலாளர் மோகன் முன்னிலையில் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவர் கேஸ்மணி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் முனிராஜ், ஒன்றிய பொருளாளர் சதீஷ்குமார், வார்டு கவுன்சிலர் பச்சையப்பன், குணாகார்த்திக் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, திமுக கிளை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக, தடங்கம் சுப்ரமணி மூன்றாவது முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, இண்டூர் பஸ் ஸ்டாண்டில், திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தன் தலைமை வகித்தார். நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணைத்தலைவர் பெரியண்ணன், ஒன்றிய இளைஞரணி ராஜகோபால், நிர்வாகிகள் வேலு, சித்தன், சின்னசாமி, கிருஷ்ணன், தங்கராஜ், கன்னியப்பன், செல்ல பெருமாள், ரவி, சக்திவேல், கவி, குமார், மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: