மருத்துவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி, செப்.29: சர்வதேச காதுகேளாதோர் வாரத்தை முன்னிட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. நாடு முழுவதும் செப்டம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை, சர்வதேச காது கேளாதோர் வாரமாக  கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி துவக்கி வைத்தார். பேரணி மருத்துவமனை உள்ளே அனைத்து வார்டுகளின் வழியாக சென்றது. இதில் துணை முதல்வர் சாந்தி, காது மூக்கு தொண்டை பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமரன் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதுபற்றி டாக்டர் செந்தில்குமரன் கூறுகையில், ‘ஆண்டுதோறும் சர்வதேச காதுகேளாதோர் வாரம், செப்டம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் 1500 பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. பிறவி காது கேளாததற்கு காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை 26 குழந்தைகளுக்கு செய்யப்பட்டுள்ளது,’ என்றார்.

Related Stories: