தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

அரூர், செப்.26:  அரூர் அடுத்த தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் தீர்த்தகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம். நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை என்பதால், தீர்த்தகிரீஸ்வரரை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ராமர் தீர்த்தம், குமார தீர்த்தம், கவுரிதீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், ஆகிய ஐவகை தீர்த்தங்களில் நீராடிய பின்பு பக்தர்கள் சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Related Stories: