கரூர் மாவட்ட பகுதிகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்ற 10 பேர் மீது வழக்கு

கரூர், செப்.23:  கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. சில பகுதிகளில் இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது தடுக்க  மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த காவல் நிலைய போலீசார் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நேற்றுமுன்தினம் குளித்தலை, பசுபதிபாளையம், லாலாப்பேட்டை போலீசார், மாவட்ட மதுவிலக்கு போலீசார் ஆகியோர் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 10 பேர்கள் மீது வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து 79 குவார்ட்டர் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: