பள்ளி கல்வித்துறை ஆணையர் ஆய்வு

ஓசூர், செப்.22: ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கேட்டு, கவுன்சிலர் சென்னீரப்பா மனு வழங்கினார். ஆய்வின்போது, கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் உட்பட பலர் இருந்தனர். இதை தொடர்ந்து, மதகொண்டப்பள்ளியில் நடந்த எண்ணும் எழுத்தும் திட்ட தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் பயிற்சி வகுப்பு நிறைவில் ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டு பேசினார்.

Related Stories: