கோவையில் கோல்ப் போட்டி

கோவை, செப்.21: கோவை கோல்ப் கிளப் சார்பாக 9வது கோல்ப்பர்ஸ் கிளாசிக் ட்ராபி கோவை செட்டிபாளையத்தில் உள்ள கோல்ப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 112 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  17வயது முதல் 85 வயதினர் வரை கலந்து கொண்ட இப்போடியில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

இதில் நெட் 0-24 பிரிவில் லீலா கிருஷ்ணன் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடி வெற்றி பெற்றனர்.  ரித்தி லட்சுமி மற்றும் பீயுஷ் மனியம்பத் ஆகியோர் சேர்ந்து விளையாடி இரண்டாம் இடம் பிடித்தனர். அண்டர் தி கிராஸ் பிரிவில் பாரத் ராம் மற்றும் விக்நிஷா ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடி  முதலிடம் பெற்றனர். நரேன்குமார் மற்றும் சக்கோலா ஜோடி இரண்டாம் இடம் பிடித்தனர்.

Related Stories: