இன்று முதல் வத்தல்மலை உள்பட 16 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் வத்தல்மலை உள்ளிட்ட 16 புதிய வழித்தடத்தில், பஸ்கள் இயக்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து தொமுச தலைவர் சின்னச்சாமி, பொதுச்செயலாளர் கிருஷ்ணன். பொருளாளர் சேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (13ம்தேதி) மதியம், தர்மபுரி வருகிறார். அவர் தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் 16 புதிய வழிதடத்தில் பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.

இதில் தர்மபுரி - வத்தல்மலை, பென்னாகரம் - ஏமனூர், மாரண்டஅள்ளி - திருவண்ணாமலை, பாலக்கோடு - பாறைக்கொட்டாய் உள்ளிட்ட 16 வழிதடத்தில் பஸ்சை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். முன்னதாக தர்மபுரி பாரதிபுரம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு, தொமுச சார்பில் அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு சிறிது நேரம் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின் பஸ் வழிதடத்தை தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: