அரசு பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர்

தர்மபுரி-சேலம் மெயின்ரோடு செந்தில்நகரில் உள்ள இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியின் சேதமடைந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த நிலையில், சமூக விரோதிகள் இரவு நேரத்தில், இதன் வழியாக சென்று பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.  இதுகுறித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வக்கீல் கருணாநிதி கூறுகையில், ‘இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்தது. மாணவர்களுக்கு பாதிக்கும் நிலையில் உள்ள சுற்றுச்சுவர் அகற்றும்படி பள்ளிக்கல்வித்துறை கூறியது. அதன்படி விழும் நிலையில் இருந்த சுவரை, சிறிது தூரத்திற்கு இடித்து அகற்றினோம். பள்ளிக்கல்வித்துறை சுற்றுச்சுவர் கட்டித்தருவதாக கூறியுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் இடித்த பகுதியில் சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும்,’ என்றார்.

Related Stories: