மாநில துப்பாக்கி சுடும் போட்டி: தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்கள்

கோவை, ஆக.9: திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த மாதம் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இதில், கோவை நேரு ரைபள் கிளப்பை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.  

இப்போட்டின் ஏர் பிஸ்டல் மாஸ்டர் பெண்கள் பிரிவில் மாணவி டிவிங்கிள் யாதவ் மற்றும் பிரீத்தி தங்கப்பதக்கம் வென்றனர். 50 மீட்டர் ஓபன் சைட் ரைப்பிள் பிரிவில் மாணவர் ஜெய்கிஷோர் தங்கப்பதக்கமும், கார்த்திக் தனபால் வெண்கல பதக்கமும் வென்றனர்.

10 மீட்டர் ஓபன் சைட் ஏர் ரைபிள் பிரிவில் மாணவர் சஜய் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றார். மாஸ்டர் உமன் பிரிவில் ஸ்வர்னலதா தங்கப்பதக்கமும், மாணவி பிரியதர்ஷினி சப்யூத் உமன் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றனர். பதக்கங்களை வென்ற மாணவ மாணவிகளை சந்தித்த கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் அவர்களை பாராட்டி கவுரவப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன் கூறுகையில்,``துப்பாக்கி சுடும் போட்டியில் நீங்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோன்று, எதிர்வரும் போட்டிகளிலும் பங்கேற்று பல்வேறு பரிசுகளை நீங்கள் வாங்கவேண்டும். போட்டிகள் மட்டுமின்றி படிப்பிலும் கவனம் செலுத்தி நல்ல மதிபெண்களை வாங்கி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்’’ என்றார். நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி, நேரு ரைபிள் கிளப் தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார், செயலாளர் அஜய் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: