கருணாநிதி நினைவு நாள் மவுன ஊர்வலம்; அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு

கோவை, ஆக.8: கலைஞர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மவுன ஊர்வலம் நேற்று நடந்தது.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரம், வி.கே.கே மேனன் சாலையில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் வரை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் திமுகவினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்பி நாகராஜ், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணைமேயர் வெற்றிச்செல்வன், முத்துசாமி, மண்டல தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனா லோகு, தெய்வாணை, வக்கீல் அருள்மொழி, ஜி.டி ராஜேந்திரன்,  சரவணன், சாந்தி முருகன், மாரிச்செல்வன், முன்னாள் கவுன்சிலர் சிங்கை பிரபாகரன், சிங்கை சிவா, சேதுராமன், சேக் அப்துல்லா, கார்த்திக் செல்வராஜ், சந்தோஷ், பிரபாகரன், அப்பாவு, மனோகரன், கார்த்திகேயன், அக்ரிபாலு, சாமி தங்கம், வி.பி.செல்வராஜ், பாலசுப்பிரமணியன், நேருநகர் தேவராஜ், கண்ணன், உக்கடம் ஆனந்த், சசிகுமார், கவுன்சிலர்கள் மார்க்கெட் மனோகரன், வித்யா ராமநாதன், சர்மிளா சுரேஷ் நாராயணன், அம்பிகா தனபால், முனியம்மாள், சாந்தாமணி, முபசீரா, கீதா சேரலாதன், தீபா, பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு, பழக்கடை முத்துமுருகன் மற்றும் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், கோவை வடக்கு மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடந்த கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு பகுதி பொறுப்பாளர் கார்த்திக் கே செல்வராஜ் தலைமை வகித்தார். கழக நிர்வாகிகள், ஜெகதீஷ், பழக்கடை ஆறுமுகம், ஆடிட்டர் ராமமூர்த்தி, ஆறுச்சாமி, ஆல்வின், மகேஸ்வரன், சுலைமான், வேலு, கண்ணன், முருகானந்தம், நவ்ஷாத், நித்திய சங்கர், பாஷா, செந்தில், மோகன், புலவர் பழனிசாமி, அமானுல்லா, சரவணன், பாண்டியராஜன், தினரகன், கதிரேசன், விஜயகுமார், சிவக்குமார், உதயகுமார், கார்த்திக், அருண்ராஜ், விக்னேஷ், ரசூல், உமர் ஷரீப், ஆட்டோ கார்த்திக் உள்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டு கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. சிங்காநல்லூர் பகுதி-2 சார்பில் நடந்த நினைவு அஞ்சலியில், 60-வது மாமன்ற உறுப்பினர் சிங்கை மு.சிவா முன்னிலை வகித்தார். 60வது வார்டு வட்ட பொறுப்பாளர் ஜெயராம் தலைமை வகித்தார். ஒண்டிப்புதூர் ஸ்டார் பள்ளியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில், 61வது வட்ட பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், தெண்ணவர், செல்வராஜ், கார்த்தி, சித்ரா, ரவீன், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: