நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு கண்காட்சி

பந்தலூர்,ஜூன்25: நெல்லியாளம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும்  விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்ச்சி தேவாலாவில் நடைபெற்றது. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்ச்சி நேற்று தேவாலாவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நெல்லியாளம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலகுமார் வரவேற்றார். நகராட்சி தலைவர் சிவகாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நகராட்சி பொறியாளர் சிவகுமார்,கவுன்சிலர்  ஆலன் ஆகியோர் குப்பைகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது.வீட்டில் உள்ள  குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்.குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக்  பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும்  பொதுமக்களிடம்  விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கண்காட்சியின் துவக்க விழாவில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது, குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது,எனது குப்பை எனது பொறுப்பு,நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது,நிலத்தடி நீரை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக நெல்லியாளம் நகர செயலாளரும் கவுன்சிலருமான சேகர்,முன்னாள் நகர் மன்ற தலைவர் அமிதலிங்கம், கவுன்சிலர்கள் வசந்தகுமாரி,விஜயா,புவனேஷ்வரி,முன்னாள் கவுன்சிலர் ஞானசேகர்,அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள்,பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: