கிருஷ்ணராயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

கிருஷ்ணராயபுரம், ஜூன் 11: கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத 60 வயது முதியவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரத்தில் நேற்று அதிகாலை திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் ஸ்டாப் கீழ்புறம் பேக்கரி அருகே நடந்து சென்ற முதியவர் மீது அடையாள தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த மகாதானபுரம் விஏஓ குமரேசன் லாலாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்தும் லாலாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: