அரூர் அருகே பிளஸ்1 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

அரூர், ஜூன் 8: அரூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவியை கடந்த மாதம் 21ம் தேதி குருபரஅள்ளியை சேர்ந்த அஜித்(30)  கடத்திச்சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அரூர் போலீசில் புகாரளித்தனர். புகாரின் பேரில் அரூர் டிஎஸ்பி பெனாசீர் பாத்திமா தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்நிலையில் அஜித்தும், மாணவியும் பெங்களூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பெங்களூருக்கு விரைந்த தனிப்படையினர் நேற்று அஜித்தை கைது செய்து அரூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, மாணவியை கடத்திச்சென்ற அஜித்தை வன்கொடுமை தடுப்புச்சட்டம், போக்சோ மற்றும் பெண் குழந்தை கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியை கடத்த அஜித்திற்கு உதவிய அவரது நண்பர் கார்த்திக்கை போலீசார் கடந்த மாதம் 31ம் தேதி கைது செய்தனர்.

Related Stories: