சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

க.பரமத்தி, மே 28: க.பரமத்தி ஒன்றிய ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ விழாவில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். க.பரமத்தி ஒன்றியத்தில் முன்னூரில் மரகதவல்லி உடனுறை மரகதீஸ்வரர் கோயில், க.பரமத்தி சௌந்தரநாயகி உடனமர் சடையீஸ்வர சுவாமி, குப்பம் குங்குமவல்லி சமேத கும்பேஸ்வரர் கோயில், மரகதவல்லி உடனுறை மரகதீஸ்வரர் கோயில், தென்னிலை சிவகாமசுந்தரி உடனமர் தேவேந்திரலிங்கேஸ்வரர் சுவாமி, சின்னதாராபுரம் முனீ முக்தீஸ்வரர், புன்னம் புன்னை வன நாயகி உடனுறை புன்னைவனநாதர் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளது.

இங்கு பிரதோஷத்தன்று சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். நேற்று பிரதோஷத்தையொட்டி நந்தியம்பெருமானுக்கு பால், பன்னீர் இளநீர் உள் ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சாமி, அம்பாள் மற்றும் நந்தியம்பெருமானுக்கு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: