கரூர் வெங்கமேடு அருகே லாரி தொழிலில் நஷ்டம் தொழிலதிபர் தற்கொலை

கரூர், மே 28: கரூர் வெங்கமேடு அருகே லாரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் வெங்கமேடு அடுத்துள்ள அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(32). இவர், பல ஆண்டுகளாக இரண்டு லாரிகளை வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக லாரி தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த மனநிலையில் காணப்பட்டு வந்த அவருக்கு அவ்வப்போது வயிற்று வலி பிரச்னையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த அவர் கடந்த 26ம் தேதி அன்று வீட்டில் யாருமில்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கினார். ஆபத்தான நிலையில், கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில், வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: