சாலை பணியை ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி, மே 27: நெடுஞ்சாலைத்துறை மூலம், பாப்பிரெட்டிப்பட்டி உட்கோட்டத்திற்குட்பட்ட மல்லாபுரம்-கோபிநாதம்பட்டி சாலையில், 3.2 கி.மீ., தொலைவிற்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டது. இப்பணிகளை, சேலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சரவணன் ஆய்வு செய்தார். அப்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நடராஜன், தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகரன் மற்றும் உதவி கோட்டப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: