ஜி.கே.மணி எம்எல்ஏவுக்கு நினைவு பரிசு

தர்மபுரி, மே 27: பாமகவில் கடந்த 25 ஆண்டுகளாக மாநில தலைவராக பதவி வகித்து வரும் ஜி.கே.மணி எம்எல்ஏவுக்கு, சென்னை அண்ணா அரங்கத்தில், பாராட்டு விழா நடந்தது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் எம்பி முன்னிலை வகித்தார். விழாவில், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து திரளான பாகவினர் கலந்து கொண்டனர்.

பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் ராமகிருஷ்ணன் பங்கேற்று, பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணிக்கு, நினைவு பரிசாக பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட லட்சுமி சிலையை நினைவு பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் பென்னாகரம் தொகுதி பாமகவினர் திரளாக கலந்து கொண்டனர்.     ...

Related Stories: