தரகம்பட்டியில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தோகைமலை, மே 20: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பாக தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் ரகுநாதன், வீராச்சாமி (எ) சுதாகர், பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் நடந்தது. தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகே நடந்த கூட்டத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் ராமலிங்கம், ரவிராஜா உள்பட கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து திமுக நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: