இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு

ஊட்டி, மே 20: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கேத்தி பாலாடா பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (26). பட்டதாரியான இவர், விவசாய பணிகள் செய்து வருகிறார். இவர், தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை வழக்கமாக நிறுத்தும் கேத்தி பாலாடா - சேலாஸ் சாலையோரத்தில் நிறுத்தி விட்டு இரு நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் இவரது இருசக்கர வாகனத்திற்கு தீயிட்டு எரித்துள்ளனர். இதில், வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. மர்மநபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் தீ வைக்கும் காட்சி அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வெளியூரில் இருந்த மனோஜிற்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். மீண்டும் வீடு திரும்பிய மனோஜ் ஊட்டி லவ்டேல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: