முதல்வருக்கு வரவேற்பு கன்னியாகுமரியில் நடக்கும் மாநில மாநாட்டில் கோவை நோட்டரி வழக்கறிஞர்களுக்கு பாராட்டு

கோவை, மே.20: தமிழகம் முழுவதும் உள்ள நோட்டரி வழக்கறிஞர்களை ஒருமித்து தமிழ்நாடு நோட்டரி வழக்கறிஞர்கள் சங்கம் என்னும் அமைப்பை திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்படுத்தியுள்ளது. இச்சங்கத்தின் முதல் மாநில மாநாடு  வரும் 28ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 25 வருடங்களுக்கு மேலாக நோட்டரி வழக்கறிஞர்களாக பணியாற்றியவர்கள் கெளரவிக்கப்படவுள்ளனர். அதன்படி கோவை மாவட்டத்தில் பணியாற்றும் நோட்டரி வழக்கறிஞர்கள் எ.மோகன், சுப்பிரமணியம், தங்கவேலு, தேவதாஸ், செல்லத்துறை, மேட்டுப்பாளையம் வீரபத்திரன், கோபு, பொள்ளாச்சி சுந்தரராஜன் ஆகியோர் பாராட்டு பெறவுள்ளனர்.

இதில், முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியும், இந்திய தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதியுமான டாக்டர். ஜோதிமணி, கேரளா மாநிலம் கொல்லம் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்சந்திரன், தமிழ்நாடு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அசோக் பத்மராஜ், திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன், தமிழ்நாடு நோட்டரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜாபர் அலி மற்றும் நிர்வாகிகள் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள நோட்டரி வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related Stories: