1.5 டன் தார் பேரல் திருடிய 2 பேர் கைது

கோவை,  மே 20: கோவை மதுக்கரை பகுதியில் தார் டிரம் திருடப்படுவதாக புகார் வந்தது.  போலீசார் சீரபாளையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த  குடோனில் 775 கிலோ எடையிலான தார் டிரம் திருடி பதுக்கி வைத்திருந்தது  தெரியவந்தது. போலீசார் விசாரணையில் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர்  ஞானப்பிரகாசம் (48) என்பவர் சாலையில் நிறுத்தி இருந்த லாரியில் இருந்து  தாரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  ஞானபிரகாசை கைது செய்தனர். மேலும் இவர் திருடி வைத்திருந்த 775 கிலோ தார்  மற்றும் 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர் .

இதேபோன்று லட்சுமி நகர்  பகுதியிலும் தார் திருடப்பட்டு பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு உள்ள ஒரு குடோனை சோதனை செய்தபோது அங்கே  775 கிலோ தார் டிரம் திருடி மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், மாச்சம்பாளையம்  பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் (33) என்பவர் தார் டிரம் திருடி  வைத்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.  இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

Related Stories: