சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

காரிமங்கலம், மே 14: காரிமங்கலம் அடுத்த பூலாபட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சரவணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இதேபோல், காரிமங்கலம் அபிதகுஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோயில், பெரியாம்பட்டி பசுபதி ஈஸ்வரர் கோயில், அனுமந்தபுரம் சிவன் கோயில் மற்றும் பல்வேறு கோயில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: