சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டிய தேயிலை பூங்கா

ஊட்டி, மே 13: ஊட்டி - கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா அருகே அமைந்துள்ள தேயிலை பூங்கா சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டி உள்ளது. ஊட்டி - கோத்தகிாி சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் 10 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத்துறை பண்ணையில் தேயிலை பூங்கா உள்ளது. தொட்டபெட்டா அருகே தேயிலையை பிரபலப்படுத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேயிலை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டங்களின் நடுவே நடைபயணம் செய்யும் வசதி, பூங்காவினை முழுமையாக கண்டு ரசிக்கும் வகையில் காட்சி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு சாதனங்கள் கொண்ட சிறு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. தேயிலை தூள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் மாதிரிகளும் நிறுவப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிப்பறை, பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, ஊட்டியில் கோடை சீசன் களை கட்ட துவங்கி உள்ள நிலையில் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மட்டுமின்றி நகருக்கு வெளியே உள்ள பைக்காரா, தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தளங்களையும் பார்த்து ரசிக்கின்றனர்.

தொட்டபெட்டாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் தேயிலை பூங்காவிற்கும் சென்று பார்வையிட்டு வருகின்றனர். தேயிலை தூள் உற்பத்தி செய்ய கூடிய மாதிரிகளையும் பாா்வையிட்டனர். ேதயிலை தோட்டங்களுக்கு நடுவே நடைபயணம் செய்து மகிழ்ந்தனர். இதனால், சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் தேயிலை பூங்கா களை கட்டி காணப்படுகிறது.

Related Stories: