கல்லூரி மாணவி மாயம்

தர்மபுரி, ஏப்.28: மகேந்திரமங்கலம் அடுத்த சொக்கம்பட்டியை சேர்ந்தவர் தேவதர்ஷினி (18). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 25ம் தேதி, கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது பெற்றோர் மகேந்திரமங்கலம் போலீசில் புகாரளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.ஏரிக்கரையில் முதியவர் சடலம் மீட்பு தர்மபுரி, ஏப்.28:மகேந்திரமங்கலம் அடுத்த குண்டாங்காடு ஏரிக்கரை பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகேந்திரமங்கலம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் யார்? என்பது தெரியவில்லை. இது குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: