10 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கோவை:  கோவை மாநகர காவல்துறையில் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதில் சரவணம்பட்டி காவல்நிலையத்தில் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செந்தில்குமார், அதே காவல்நிலையத்தில் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு உள்ளார்.  போத்தனூர் சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் அதே காவல் நிலையத்தில் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், ரத்தினபுரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா அதே காவல்நிலைய சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், ரத்தினபுரி தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், குனியமுத்தூர் போலீஸ் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், மேற்கு மண்டலத்தில் பதவி உயர்வு பெற்ற பாஸ்கரன் குனியமுத்தூர் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பதவி உயர்வு பெற்ற செல்வராஜ் மாநகர வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பதவி உயர்வு பெற்ற கிருஷ்ணவேணி மாநகர தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், நாககவிதா மாநகர நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிய சாந்தி சைபர் கிரைம் மண்டல ஆய்வக இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Related Stories: