துப்பாக்கியுடன் விமான நிலையத்தில் நுழைந்த காங்கிரஸ் பிரமுகருக்கு ஜாமீன்

கோவை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியை சேர்ந்தவர் தங்கல்(60). காங்கிரஸ் பிரமுகர். இவர் பட்டாம்பியில் தனியார் பள்ளி நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி பெங்களூரு செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவரது உடமைகனை சோதனை செய்தபோது அதில் கைத்துப்பாக்கியும், 7 தோட்டாக்களும் இருந்தது. இதையடுத்து, அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் (சிஐஎஸ்எப்) ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி ஆயுத தடை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தங்கல் புற்றுநோய் மற்றும் இதய நோய் இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக தனக்கு ஜாமீன் கேட்டு கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நேற்று அந்த மனுவை விசாரித்த முதன்மை நீதிபதி சக்திவேல் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

Related Stories: