ராயனூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், ஜன.22:கரூர் ராயனூரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில், பெட்ரோல் பங்க் பகுதியில் இருந்து பொன்நகர் வரை சாலையின் இருபுறமும் அதிகளவு குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.இதில், குறிப்பிட்ட தூரம் சாலையோரம் ஆக்ரமிப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாலையின் வழியாக கரூரில் இருந்து திண்டுக்கல், கோடங்கிப்பட்டி, திருச்சி பைபாஸ் சாலை, ஈசநத்தம், பாகநத்தம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகிறது.

மேலும், ஆக்கிரமிப்புகள் உள்ள நிலையில், மற்ற இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, அடிக்கடி விபத்துக்களும் நடைபெற்று வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு ஆக்ரமிப்பு உள்ளதா? என்பதை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: