கும்பாபிஷேக விழா

கடத்தூர், ஜன.21: கடத்தூர் அருகே ஒடசல்பட்டிபுதூரில் சத்குரு துக்காராம் சித்தர் ஜீவ சமாதி திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோயிலின், கும்பாபிஷேக விழா தலைமை அறங்காவலர் மணிமாறன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் 108 வகையான மூலிகைகள் கொண்டு யாக பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து அருணாசலேஸ்வரர் சுவாமி மற்றும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பாண்டுரங்கன் மற்றும் காலபைரவர் சிலைகளுக்கு அபிஷேகம் நடந்தது.

Related Stories: