மாவட்டத்தில் துவரை பயிர் அறுவடைக்கு தயார்

தர்மபுரி, ஜன.20: தர்மபுரி மாவட்டத்தில் துவரை சாகுபடி ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தொடங்குகிறது. மார்கழி அல்லது தை மாதத்தில் அறுவடை தொடங்கி விடும். தற்போது செடிகளில் துவரை காய்த்து தொங்குகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் பருப்பு வகை பயிர் 19 ஆயிரம் ஹெக்டேரில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டாக துவரம் பருப்புக்கு மார்க்கெட்டில் அதிக விலை கிடைத்து வருவதால், பெரும்பாலான விவசாயிகள் துவரை பயிர் செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய மேட்டுப்பாங்கான பகுதிகளில் துவரை அதிக அளவில்  சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த புரட்டாசி, ஐப்பாசி மாதத்தில் பெய்த சிறுமழையை பயன்படுத்தி தர்மபுரி அடுத்த சவுளூர் பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் துவரை சாகுபடி செய்துள்ளனர். தற்போது துவரை செடிகள் நன்கு வளர்ந்து காய்த்துள்ளதால், விவசாயிகள் அறுவடைக்கு தயாராகி வருகின்றனர்.

Related Stories: