திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

தர்மபுரி, ஜன.9: தர்மபுரி நகராட்சி 4, 5, 7, 8, 30வது வார்டுகளில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். 8வது வார்டில் நடந்த முகாமில் நகர பொறுப்புக்குழு உறுப்பினர் கோல்டன் அன்பழகன் வரவேற்றார். முகாமில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி, சந்திரமோகன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முல்லைவேந்தன், சுருளிராஜன், காசிநாதன், வெல்டிங் ராஜா, மோகன், கனகராஜ், ரமேஷ், சின்ராஜ், அணிகளின் அமைப்பாளர்கள் ரவி, ரஹீம், டிஏ குமார், ரஜினி ரவி, மாதேஷ், முருகன், சக்திவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: