குறைதீர் கூட்டத்தில் 585 மனுக்கள் குவிந்தது

தர்மபுரி, டிச.28: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், வாரிசு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 585 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களை பெற்றுகொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு தீர்வினை உடனுக்குடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். கூட்டத்தில் டிஆர்ஓ அனிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசசேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: