விபத்தில் இளம்பெண் பலி

தர்மபுரி, டிச.23: பாலக்கோடு அருகே, திப்பம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி கவிதா (23). இவர், நேற்று முன்தினம், டூவீலரில் பாலக்கோடு-காரிமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, ராஜாதோப்பு முனியப்பன் கோயில் அருகே வந்த போது, தனியார் பஸ் டூவீலர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த கவிதா சம்பவயிடத்திலேயே பலியானார். இதுகுறித்து, பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: