தியாகராஜர் ஆராதனை விழா

தர்மபுரி, டிச.22: தர்மபுரி மாவட்ட கிராமிய பேண்டு மற்றும் நாதஸ்வரம் தவில் இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில், 21வது ஆண்டு ஸ்ரீ தியாகராஜர் சுவாமி ஆராதனை விழாவை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு, சாலை விநாயகர் கோயிலில் இருந்து தியாகராஜர் உருவப்படத்துடன் 501 பேர் இசைக்கருவிகளுடன் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் கொரோனா குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து தனியார் மண்டபத்தில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமி ஆராதனை விழா நடந்தது. விழாவிற்கு சேலம் மண்டல கலை பண்பாண்டுத்துறை உதவி இயக்குனர் ஹேமநாதன் தலைமை வகித்து பேசினார். மாவட்ட தலைவர் தணிக்காசலம் முன்னிலை வகித்தார். விழாவில், சிறப்பு கலைமாமணி மற்றும் கலையரசர் விருது பெற்ற பெற்றவர்களை பாராட்டி கவுரவிக்கப்பட்டது. ஏராளமான இசைக்கலைஞர்கள், தப்பாட்டம், கோலாட்டம், காவடியாட்டம் மற்றும் நாடக கலைஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

Related Stories: