இந்தியன் வெல்டிங் சொசைட்டியுடன் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கரூர், டிச. 15: கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி இந்தியன் வெல்டிங் சொசைட்டி, திருச்சி (தென் மண்டலம்) உடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த நவம்பர் 30ம் தேதி என்.ராஜசேகரன், செயலாளர், இந்தியன் வெல்டிங் சொசைட்டி, திருச்சி (தென் மண்டலம்), டாக்டர் என்.ரமேஷ் பாபு, முதல்வர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, தளவாபாளையம், கரூர், இணை செயலாளர் டாக்டர் என். ராஜு, இந்தியன் வெல்டிங் சொசைட்டி, திருச்சி (தென் மண்டலம்) ஆகியோர் முன்னிலையில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இந்தியன் வெல்டிங் சொசைட்டி, பல்வேறு துறைகளில் பல்வேறு திறன் மேம்பாட்டு படிப்புகளை வழங்குகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இதுபோன்ற படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு எண்ணிக்கையிலான மாணவர்கள், ஆசிரியர்களை அனுப்ப எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வழி வகை செய்கிறது. மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்தியன் வெல்டிங் சொசைட்டி, எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழிகாட்டுதல் செய்யமுடியும். அத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இந்தியன் வெல்டிங் சொசைட்டி உடன் இணைந்து கருத்தரங்குகள், சிம்போசியங்கள், மாநாடுகள் போன்ற நிகழ்வுகளை எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி நடத்த வழி வகை செய்கிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்த சந்திப்பின்பொழுது, இந்தியன் வெல்டிங் சொசைட்டி, திருச்சி (தென் மண்டலம்) கூடுதல் இணை செயலாளர் எஸ்.சிங்காரவேலு, டாக்டர் சி.ரமேஷ், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், டாக்டர் எம். பாலகிருஷ்ணன், பேராசிரியர், இயந்திரவியல் துறை, எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி ஆகியோர் உடனிருந்தனர்.

கத்திரிக்காய்    ரூ.80

வெண்டைக்காய்     70

தக்காளி     80

புடலங்காய்     50

பீர்க்கங்காய்     75

அவரைக்காய்     80

பாகற்காய்     65

கொத்தவரங்காய்     40

முள்ளங்கி     40

பரங்கிக்காய்     15

முருங்கைக்காய்     70

வாழைக்காய்     26

வெங்காயம்     45

வெங்காயம் பெல்லாரி     52

பச்சைமிளகாய்    ரூ.30

கொத்தமல்லி     55

புதினா     40

சேனைக்கிழங்கு     30

கருணைகிழங்கு     50

சேப்பங்கிழங்கு     40

எலுமிச்சைபழம்     70

பூவன் பழம்     40

ரஸ்தாளி     50

கேரட்     58

முட்டைகோஸ்     30

பீட்ருட்     50

உருளைக்கிழங்கு     40

இஞ்சி     50

பெட்ரோல் லிட்டர்: ரூ.101.70

1 கிராம் .... ரூ.4,620

1 பவுன் .... ரூ.36,960

டீசல் லிட்டர்: ரூ.91.76

Related Stories: