நந்தனார் காலனியில் பொதுக்கழிப்பிடத்தை பராமரிக்க கோரிக்கை

பொள்ளாச்சி, டிச. 8: பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று  முன்தினம் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இலவச வீட்டு  மனைபட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, ஆக்கிரமிப்பு அகற்றம், பாட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 30க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘பொள்ளாச்சி பல்லடம் ரோடு நந்தனார் காலனி பகுதியில் பெரும்பாலும் துப்புரவு பணியாளர்களே வசிக்கின்றனர். கடந்த 10 அண்டுகளாக ஆங்காங்கே சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சுகாதாரமின்றி காணப்படுகிறது.

மேலும், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இங்குள்ள பொதுக்கழிப்பிட பகுதி பராமரிப்பின்றி கிடப்பில் போடப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, பொதுக்கழிப்பிட சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். கழிப்பிடம் அருகே உள்ள அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தையும் உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: