கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி தரமின்றி விநியோகம்

கோவை, டிச. 7: கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் வினியோகிக்கப்பட்ட அரிசி தரமில்லாத இருப்பதால், அதை  அப்பகுதி மக்கள் வாங்காமல் திரும்பி செல்கின்றனர்.தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி வாங்கும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள எண் 31,68,97,111 ஆகிய ரேஷன் கடைகளில் அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப் படுகிறது. டிசம்பர் மாதத்திற்கான இலவச ரேஷன் அரிசி கடந்த 6 நாட்களாக  மேற்குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது.

இந்த அரிசி கருப்பு கலந்த குருணையாகவும், தரமில்லாமலும் இருப்பதாக  இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘டிசம்பர் மாதத்திற்காக வழங்கப்பட்ட அரிசி கருப்பு கலந்து குருணையாகவும், தரமில்லாமலும் இருக்கிறது. இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் புகார் கூறினோம். இந்த அரிசியை உபயோகப்படுத்த முடியாததால் இதை வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறினர்.

Related Stories:

More