முன்விரோதம் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு

கிருஷ்ணராயபுரம், டிச.6: கிருஷ்ணராயபுரம் அருகே கொடுக்கல், வாங்கல் தகராறில் மளிகைகடைக்காரருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பூவம்பாடியை சேர்ந்தவர் பாண்டியன் (63). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றார். அதே பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (எ) சதீஷ்குமார் (25) கூலி வேலை செய்து வருகின்றார். இவருக்கும், பாண்டியனுக்கும் ஏற்கனவே கொடுக்கல் வாங்கல் தகராறில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பாண்டியன் நேற்று அதிகாலை 5 மணி அளவில் சேங்கல் பால் சொசைட்டிக்கு பால் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற சதீஷ்குமார் சேங்கல் பால் சொசைட்டி வெளியே பாண்டியனை கழுத்துப்பகுதியில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கத்திரிக்காய்    ரூ.80

வெண்டைக்காய்     70

தக்காளி     80

புடலங்காய்     50

பீர்க்கங்காய்     75

அவரைக்காய்     80

பாகற்காய்     65

கொத்தவரங்காய்     40

முள்ளங்கி     40

பரங்கிக்காய்     15

முருங்கைக்காய்     70

வாழைக்காய்     26

வெங்காயம்     45

வெங்காயம் பெல்லாரி     52

பச்சைமிளகாய்    ரூ.30

கொத்தமல்லி     55

புதினா     40

சேனைக்கிழங்கு     30

கருணைகிழங்கு     50

சேப்பங்கிழங்கு     40

எலுமிச்சைபழம்     70

பூவன் பழம்     40

ரஸ்தாளி     50

கேரட்     58

முட்டைகோஸ்     30

பீட்ருட்     50

உருளைக்கிழங்கு     40

இஞ்சி     50

பெட்ரோல் லிட்டர்: ரூ.101.70

1 கிராம் .... ரூ.4,615

1 பவுன் .... ரூ.36,920

டீசல் லிட்டர்: ரூ.91.76

Related Stories:

More