மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாட்டம்

கடத்தூர,டிச.5: கடத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பகல்நேர பாதுகாப்பு மையத்தில், 20 மாற்றுத்திறனாளி குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இம்மையத்தில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. மொரப்பூர் வட்டார கல்வி அலுவலர் தங்கவேல் தலைமை  வகித்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், தலைமை ஆசிரியர் இந்திரா காந்தி, ஆசிரியர் வள்ளி, காப்பாளர் சிவகாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More