நகர், கிராமபுறங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்

பொள்ளாச்சி,டிச.5: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட நகர், கிராமபுற பகுதியில் நேற்று நடந்த, மெகா தடுப்பூசி சிறப்பு முகாமில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முகாம்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி , கிணத்துக்கடவு,வால்பாறை,ஆனைமலை தாலுகாவிற்குடப்ட்ட  நகர் மற்றும்  கிராமப்புறங்களில் கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த, கடந்த 5 மாதத்திற்கு முன்பு தடுப்பூசி முகாம் அவ்வப்போது நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த செப்டம்பர் 12ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்  துவக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நேற்று, அனைத்து தாலுகாவிலும் அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் மீண்டும் சிறப்பு முகாம் அமைத்து, தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

நகர்பகுதி மற்றும் கிராமங்கள் என பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்றதாலும், பரவலான மழை காரணமாகவும் அனைத்து மையங்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.  பல்வேறு முகாம்களில் கோவிட்சீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. நகராட்சிக்குட்பட்ட மையங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை, நகராட்சி ஆணையாளர் தாணுமூத்தி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதுபோல், ஒன்றிய,கிராம பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை அந்தந்த பகுதி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories: