கோவையில் பரவலாக மழை

கோவை, டிச.3: கோவை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. புறநகரில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பதிவானது. பகல் நேர வெயில் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் சீதோஷ்ண நிலை மாறியது. இரவில் மின்னல் இடியுடன் மழை பெய்ததில் ரோட்டில் பல இடங்களில் வெள்ளம் பாய்ந்தது. தடாகம் ரோடு, மில் ரோடு, அவினாசி ரோடு சப்வே, கிக்கானி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. மழையின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நகரில் மழையின் காரணமாக பல இடங்களில் ரோடு குழியும் மேடுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Related Stories:

More