பைசுஅள்ளியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

காரிமங்கலம், டிச.2: காரிமங்கலம் தாலுகா, பெரியாம்பட்டி பிர்காவிற்கு உட்பட்ட பைசுஅள்ளி கிராமத்தில், சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டார். 10க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாசில்தார் சின்னா, ஆர்.ஐ.கவிப்பிரியா, விஏஓக்கள் மாயக்கண்ணன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More