கோதண்டராமர் கோயிலில் ராமநவமி விழா

தர்மபுரி, ஏப்.23:  தர்மபுரி வெங்கட்டம்பட்டி கோதண்டராமர் கோயிலில் நேற்று 56வது ஆண்டு ராமநவமி நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது. காலை 7.30 மணிக்கு கோயில் வளாகத்தில், சீதாராமர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவில் கொரோனா கட்டுப்பாடு விதிகளின்படி 100 பேர் மட்டும், உரிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. மாலை 7 மணிக்கு சீதாராமர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டி தலைவர் காவேரி செட்டியார், ஊர் செட்டியார்கள் துரைராஜ், செந்தில்குமார், கோதண்டராமர் கமிட்டி செயலாளர் மாதையன், பொருளாளர் சின்னமுனுசாமி மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories:

>