இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அரசு பஸ்கள் மார்க்கம் வாரியாக இயங்கும் நேரம்

தர்மபுரி, ஏப்.20:  தர்மபுரி மாவட்டத்தில், இன்று(20ம் தேதி) முதல் இரவு நேரத்தில் ஊரடங்கு எதிரொலியாக, அரசு பஸ்கள் பேருந்து நிலையங்களிலிருந்து மார்க்கம் வாரியாக மாற்றி இயக்கப்படுகிறது.  இதுகுறித்து தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு இன்று (20ம் தேதி) முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை, இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தர்மபுரி மண்டலத்தின் மூலம் பொதுமக்களின் நலன் கருதி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலிருந்து கீழ்க்கண்ட மார்க்கங்களுக்கு, அதன் எதிரே குறிப்பிட்டுள்ள நேரங்களில் கடைசி பேருந்தாக புறப்பட்டு, இரவு 10 மணிக்குள் எதிர்திசையில் சென்றடையும் வகையில், பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தர்மபுரி புறநகர் பேருந்து நிலையம் மார்க்கம் கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, சென்னை, திருப்பத்தூர், சேலம், மேட்டூர், பென்னாகரம், பாலக்கோடு, பொம்மிடி, அரூர் மார்க்கமாக புறப்பட்டு செல்கிறது. பென்னாகரம் பேருந்து நிலையம் தர்மபுரி, மேச்சேரி மார்க்கமாக புறப்படுகிறது. பாலக்கோடு பேருந்து நிலையம் தர்மபுரி, ஓசூர் மார்க்கவும், பொம்மிடி பேருந்து நிலையம் தர்மபுரி, சேலம், ஓமலூர் மார்க்கமாகவும், அரூர் பேருந்து நிலையம் தர்மபுரி, சேலம், ஊத்தங்கரை, திருவண்ணாமலை மார்க்கமாக அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: