மின் இணைப்பு தருவதாக கூறி பணம் வசூலித்தால் நடவடிக்கை

தர்மபுரி, ஏப்.20: தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மின்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத நபர்கள், மின்வாரியத்தில் இருந்து வருவதாகத் தெரிவித்து மின் இணைப்பு வழங்குவதாகக் கூறி, பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து கொண்டு, முறைகேடான வகையில், மின் மீட்டரை கொடுத்து ஏமாற்றி வருவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின் வாரியத்தில் அனைத்து மின் இணைப்புகளும், கணினி வழி பதிவின் மூலம் மட்டுமே செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம். அவ்வாறு தங்களை அணுகினால், உடனடியாக காவல் துறையில் புகார் செய்ய வேண்டும். மேலும், அருகில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>