அரூர் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணி ஆய்வு

அரூர், ஏப்.18: அரூர் தேர்வு நிலைப் பேரூராட்சி பகுதியில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன் நேற்று ஆய்வு செய்தார். 18 வார்டுகளிலும் நடைபெற்று வரும் கொரோனா நோய்தடுப்பு பணிகள், கிருமி நாசினி தெளித்தல் பணி, பொது சுகாதாரப்பணிகள், வடிகால் சுத்தம் செய்தல் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பஸ் ஸ்டாண்ட், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைவரும் முக கவசம் அணிகிறார்களா, தனி மனித இடைவெளி பின்பற்றப்படுகிறதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். வியாபார நிறுவனங்களில் சேனிடைசர் வைக்க வேண்டும், சமூக இடைவெளி கட்டாயம் பின்ற வேண்டும், அடிக்கடி கை கழுவுதல் போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் விழிப்புணர்வு செய்யப்பட்டது. முக கவசம் அணியாதவர்கள் சமூக இடைவெளியினை பிற்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி, துப்புரவு ஆய்வாளர், சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>