நோய் தொற்றை தவிர்க்க கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம்

தர்மபுரி, ஏப்.16: கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக, அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம். அதை தவிர வேறுவழியில்லை என்று மாவட்ட கலெக்டர் கூறினார். தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி மற்றும் கெட்டூர் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடந்தது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா தடுப்பூசி திருவிழாவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் பேசியதாவது: கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதை தவிர வேறுவழியில்லை. முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்கள், பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. அரசு அலுவலர்கள், 45 வயதிற்கு 100 நாள் திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு நண்பர்கள், உறவினர்கள், அருகில் உள்ளவர்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு அறிவுரை வழங்க வேண்டும். எந்தவித பக்கவிளைவும் ஏற்படுத்தாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் தங்களையும், தங்கள் குடும்பத்தையும், சமுதாயத்தையும் கொரோனா நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, தாசில்தார் கலைச்செல்வி, பிடிஓக்கள் மணிவண்ணன், ராமஜெயம், வட்டார மருத்துவ அலுவலர் அனுராதா, உதவி திட்ட அலுவலர்கள் கணேசன், அப்புசாமி ஆகியோர் கலந்து

கொண்டனர்.

Related Stories: