சரவணம்பட்டி, சூலூரில் சுப்ரீம் மொபைல்ஸ்-ன் புதிய கிளைகள் துவக்கம்

கோவை,ஏப்.15: சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தின் 67வது கிளை கோவை சரவணம்பட்டி மற்றும் 68வது கிளை சூலூரிலும் நேற்று துவக்கப்பட்டது. சுப்ரீம் மொபைல்சின் 67 வது ஷோரூமை கோவை சத்தி ரோடு, சரவணம்பட்டி, காந்திசிலை அருகில் நோக்கியோ விநியோகஸ்தர் சீனிவாசன் திறந்து வைத்தார். சுப்ரீம் மொபைல்ஸ் இயக்குனர் சந்துரு, துளசிமணி, குரு, தேவராஜ், சசிகலா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். முதல் விற்பனையை சந்தோஷ்குமார் பெற்றுக் கொண்டார்.  

இதே போல 68வது ஷோரூமை சூலூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் கோவை எல்ஜி விநியோகஸ்தர் வாஸ்துபால் ரஜினிகாந்த் திறந்து வைத்தார் கட்டிட உரிமையாளர் ரவிக்குமார், கலங்கல் பஞ்சாயத்து தலைவர் ரங்கநாதன், சிவராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். முதல் விற்பனையை தம்பு கார்ஸ் நிர்வாக இயக்குனர் பாலச்சந்தர் பெறறுக் கொண்டார்.

இதுகுறித்து சுப்ரீம் மொபைல்ஸ் பிராந்திய விற்பனை மேலாளர் சிவராஜ், ராஜசேகர் மற்றும் கிளை மேலாளர் மைதீன் ஆகியோர் கூறுகையில், இது கோவையில் இந்நிறுவனத்தின் 17 மற்றும் 18வது ஷோரூம்கள் ஆகும். இப்புதிய கிளையில்,  எச்பி, டெல்,லெனோவா, ஏஸர்,அசஸ் முதலிய பிராண்டுகள் லேப்டாப்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட உலகின் முன்னணி பிராண்ட் மொபைல் போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் அவற்றின் அக் ஷசரீஸ் முதலிய விற்பனைக்கு உள்ளன. லேப்டாப், மொபைல் போன்கள் வாங்கும் அனைவருக்கும் 10 கிலோ அரிசி, குக்கர், டேபிள் பேன், டவர் பேன், ஏர்கூலர்  உள்ளிட்ட நிச்சயப்பரிசு உண்டு. சிறப்புத் தள்ளுபடிகள், கேஷ் பேக் ஆஃபர், ரூ. ஒரு லட்சம் வரை உடனடி கடன் அப்ரூவல் வசதி, பழைய பொருட்களுக்கு அதிகபட்ச எக்சேஞ்ச் விலை முதலிய வசதிகள் உண்டு.

மேலும் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கிளைகளிலும் பல அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொருட்கள் வாங்க ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்கள், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கட்டாயம் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, விற்பனையாளர் கையுறை அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், உடல் வெப்பநிலை பரிசோதித்தல் உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளும் பின்பற்றி ஒத்துழைப்பு தரவேண்டும். மேலும் விபரங்களுக்கு, சரவணம்பட்டி - 73977 - 77913 மற்றும் சூலூர் 73977 - 77914 என்ற செல்போன் எண்களில் அழைக்கலாம் என்றனர்.

Related Stories: